ஓட்டுச்சாவடிகள் சி.சி.டி.வி., மூலம் கண்காணிப்பு மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
ஓட்டுச்சாவடிகள் சி.சி.டி.வி., மூலம் கண்காணிப்பு மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
ADDED : ஏப் 09, 2026 05:22 AM
புதுச்சேரி: சட்டசபை தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடி அனைத்தும் சி.சி.டி.வி., மூலம் கண்காணிக்கப்படுகிறது.
மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி புதுச்சேரியில் இன்று ஓட்டுப்பதிவு சுமூகமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் தலா 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருங்கிணைந்த கண்காணிப்பு, கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இணைய வழியில் நேரலையில் கண்காணிக்கப்படுகிறது.
ஓட்டுப்பதிவு தொடர்பான புகார்களை பொதுமக்கள் இணையவழி நேரலை கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைக்கு 0413-1950, 94434 34972, 94433 75089 என்ற தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். இந்த கட்டுப்பாட்டு அறைகள் மூலம் வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரியின் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
