/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசியல் பேசாமல் இணைந்து பணியாற்ற எதிர்கட்சியினருக்கு பொன்முடி 'அட்வைஸ்'
/
அரசியல் பேசாமல் இணைந்து பணியாற்ற எதிர்கட்சியினருக்கு பொன்முடி 'அட்வைஸ்'
அரசியல் பேசாமல் இணைந்து பணியாற்ற எதிர்கட்சியினருக்கு பொன்முடி 'அட்வைஸ்'
அரசியல் பேசாமல் இணைந்து பணியாற்ற எதிர்கட்சியினருக்கு பொன்முடி 'அட்வைஸ்'
ADDED : அக் 17, 2024 12:16 AM
விழுப்புரம் : 'தமிழகத்தில் மழைக்கால மீட்பு பணியில், அரசியல் பேசாமல், எதிர்கட்சியினரும் துணையாக இருந்து பணியாற்ற வேண்டும்' என்று, அமைச்சர் பொன்முடி கூறினார்.
விழுப்புரத்தில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வுசெய்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது:
முதல்வர் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக, கடந்த ஒருவாரமாக கழிவுநீர் வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் தூர்வாரப்பட்டதால், தொடர் மழை பெய்தும் எந்தவிதபாதிப்பும் ஏற்படவில்லை. கனமழை பெய்தாலும், பாதிப்பை தடுத்திடும் வகையில் முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்ந்து நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, தி.மு.க., அரசின் மழைக்கால பணியை எதிர்கட்சித் தலைவர் விமர்சனம் செய்துள்ளது குறித்து கேட்டபோது, சென்னையில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் முழு ஈடுபாடுடன் செயல்பட்டதால், மழைநீர் வடிகால் பணி துரிதமாக நடந்துள்ளது. இரவே பல இடங்களில் மழை நீர் வடிந்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, அம்மா உணவகம் மூலமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியின்போது மழைக்கால நிலவரத்தை அனைவரும் அறிந்திருப்பார்கள். எனவே, மழைக்கால மீட்பு பணியில் அரசியல் பேசாமல், எதிர்கட்சியினரும் துணையாக இருந்து பணியாற்ற வேண்டும்' என்றார்.

