வெங்கடேஸ்வரா கல்லுாரியில் முதுநிலை படிப்பு சேர்க்கை
வெங்கடேஸ்வரா கல்லுாரியில் முதுநிலை படிப்பு சேர்க்கை
UPDATED : நவ 12, 2026 09:53 PM
ADDED : நவ 12, 2026 09:50 PM
வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் முதுநிலை மருத்துவ படிப்பதற்கு மாணவர்கள் கலந்தாய்வை எம்.சி.சி., நடத்திக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி, இவ்வாண்டு முதல் வெங்கடேஸ்வரா வித்யாபீத் நிகர் நிலை பல்கலை கழகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வெங்கடேஸ்வரா வித்யாபீத் நிகர் நிலை பல்கலை கழகத்தில் நடப்பாண்டிற்கு முதுநிலை படிப்பிற்கு சேர விரும்பும் மாணவர்கள் எம்.சி.சி., இணைய தளத்தில் பதிவு செய்தனர்.
அதனை எதிர்த்து புதுச்சேரி சென்டாக் சார்பில், கடந்த 11ம் தேதி இடைக்கால தடை பெற்றனர்.
கல்லுாரி நிர்வாகம் தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றத்தை அனுகியது. வெங்கடேஸ்வரா வித்யாபீத் பல்கலைக்கழகத்தில் இவ்வாண்டு முதுநிலை படிப்பிற்கு சேர விரும்பும் மாணவர்கள் எம்.சி.சி., இணைய தளத்தில் பதிவு செய்துகொள்ள நேற்று நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
இத்தகவலை வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் இயக்குனர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
