ஸ்த்ரீ சக்தி பெண்கள் மேம்பாட்டு கொண்டாட்ட தொடர் 2.0 நிகழ்ச்சி
ஸ்த்ரீ சக்தி பெண்கள் மேம்பாட்டு கொண்டாட்ட தொடர் 2.0 நிகழ்ச்சி
ADDED : நவ 12, 2026 09:53 PM
புதுச்சேரி: புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசு முதுநிலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஸ்த்ரீ சக்தி – பெண்கள் மேம்பாட்டுக் கொண்டாட்டத் தொடர் 2.0 நிகழ்ச்சி நடந்தது.
மகளிர் மன்றத்தின் சார்பில், பொருளாதாரவியல் துறை ஸ்மார்ட் வகுப்பறையில் நிகழ்ச்சி இன்று (நவ.,12) நடந்தது. பேராசிரியர் மேரி ஜோசப் அருணா வரவேற்றார். உதவிப் பேராசிரியர் ராஜினி சானோலியன் நோக்கவுரையாற்றினார். வணிகவியல் துறைத் தலைவர் கற்பகம் வாழ்த்துரை வழங்கினார்.
நிறுவனத்தின் இயக்குநர் சசி காந்தா தாஸ், பெண்களின் முன்னேற்றத்தில் கல்வி, தன்னம்பிக்கை, சமத்துவம் மற்றும் சமூக பங்கேற்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
பிரெஞ்சு புதுச்சேரி நிறுவனத்தின் சமூக அறிவியல் துறை ஆராய்ச்சி இணை அலுவலர் ரோஜா லட்சுமி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் இல்லறவியல் திட்ட உதவியாளர் பொம்மி ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
உதவிப் பேராசிரியர் அலமேலு மங்கை நன்றி கூறினார்.
