UPDATED : அக் 13, 2026 09:20 PM
ADDED : அக் 13, 2026 08:37 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ரெட்டியார்பாளையத்தில் நாளை (15ம் தேதி) மின்நுகர்வோர் குறைதீர்வு முகாம் நடக்கிறது.
புதுச்சேரி மின்துறை பூமியான்பேட்டை இயக்குதல் மற்றும் பராமரித்தல் சார்பில், ரெட்டியார்பாளையம் ஜவகர் நகரில் நாளை (15ம் தேதி) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்வு முகாம் நடக்கிறது.
அதில், மின்வினியோகம் பெறும் பூமியான்பேட்டை மற்றும் வில்லியனுார் இளநிலை பொறியாளர் அலுவகத்திற்குட்பட்ட, மின் நுகர்வோர் முகாமில் பங்கேற்று, மின் பட்டியல், குறைந்த மின் அழுத்தம், மின் மானிகளின் குறைபாடு, தெரு விளக்கு மற்றும் மின் நுகர்வு தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம் என, செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
