/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சொரப்பூர் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம்
/
சொரப்பூர் கோவிலில் பிரபந்த சேவை உற்சவம்
ADDED : டிச 08, 2025 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்தசேவை உற்சவம் நேற்று நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில் புனர்பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை 8:00 மணிக்கு பிரபந்த சேவை உற்சவம், காலை 11:00 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின் சன்னதி புறப்பாடு, சாத்து முறை நிகழ்ச்சி நடந்தது.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

