/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கைதி மணிகண்டன் ஏனாம் சிறைக்கு மாற்றம்
/
கைதி மணிகண்டன் ஏனாம் சிறைக்கு மாற்றம்
ADDED : பிப் 18, 2025 06:38 AM
புதுச்சேரி: புதுச்சேரி சிறையில் இருந்த ரவுடி மணிகண்டன், ஏனாம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ரவுடி மணி (எ) மணிகண்டன், சிறையில் சக கைதிகளை சேர்த்து கொண்டு சட்டவிரோத செயலில் ஈடுப்பட்டு வந்ததால், கடந்த ஆண்டு டிச., மாதம் ஏனாம் சிறைக்கு மாற்றப்பட்டார்.
உடல்நிலை பரிசோதனை காரணமாக கடந்த 2ம் தேதி ஜிப்மர் மருத்துவமனை வந்த கைதி மணிகண்டனுக்கு சில பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான முடிவுகள் வர தாமதம் ஏற்பட்டதால் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது, சிறை அதிகாரிகளின் வழக்கமான சோதனையின் போது, மணிகண்டன் மொபைல்போன் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
ரவுடி மணிகண்டனிடம் இருந்து மொபைல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் மருத்தவ பரிசோதனை முடிவுகள் வந்ததுடன், சிகிச்சை முடிந்ததால் காலாப்பட்டு சிறையில் இருந்த கைதி மணிகண்டன் கடந்த 16ம் தேதி ஏனாம் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

