ADDED : நவ 05, 2026 10:21 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: பிள்ளைசாவடியில் அரசின் அனுமதியின்றி செயல்பட்ட தனியார் பீச் ரிசார்ட் இடிக்கும் பணி இன்று (நவ.,5) இரண்டாம் நாளாக தொடர்ந்தது.
பிள்ளைச்சாவடி சாய்பாபா கோவில் அருகில் அரசின் அனுமதி இல்லாமல் தனியார் பீச் ரிசார்ட் இயங்கி வந்தது. இதனை எதிர்த்து புதுச்சேரி பிரபாவதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தனியார் ரிசார்ட்டை இடிக்க உத்தரவிட்டது. ஆனால் ரிசார்ட் தொடர்ந்து இயங்கி வந்தது. இதனையடுத்து பிரபாதேவி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து ரிசார்ட் இடிக்கும் பணி நேற்று (நவ.,4) துவங்கியது. இன்று இரண்டாம் நாளாக பீச் ரிசார்ட் இடிக்கும் பணி தொடர்ந்தது.
