தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தனியார் கல்லுாரி பஸ் அரசு பஸ் மீது மோதல்

தனியார் கல்லுாரி பஸ் அரசு பஸ் மீது மோதல்

தனியார் கல்லுாரி பஸ் அரசு பஸ் மீது மோதல்


UPDATED : நவ 20, 2026 08:04 PM

ADDED : நவ 20, 2026 08:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 08:04 PM ADDED : நவ 20, 2026 08:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் தமிழக அரசு மீது தனியார் பொறியியல் கல்லுாரி பஸ் மோதி விபத்திற்குள்ளானது.

லாஸ்பேட்டையில் இருந்து மதகடிப்பட்டிற்கு மாணவர்களை ஏற்றிக் கொண்டு தனியார் பொறியியல் கல்லுாரி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. ராஜிவ்காந்தி குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனை அருகில் வந்த போது, பஸ்சில் ஏற்பட்ட பழுதால் பிரேக் பிடிக்கவில்லை.

கட்டுப்பாட்டை இழந்த பஸ், திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரி வந்த தமிழக அரசு பஸ் மீது மோதி நின்றது. இரண்டு பஸ்களிலும் வந்தவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கல்லுாரி பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us