பிராட்பேண்ட் இணை சேவைகளை தனியாருக்கு வழங்குவதை தடுக்கவேண்டும்
பிராட்பேண்ட் இணை சேவைகளை தனியாருக்கு வழங்குவதை தடுக்கவேண்டும்
UPDATED : அக் 22, 2026 07:20 PM
ADDED : அக் 22, 2026 07:16 PM
புதுச்சேரி: செயற்கைகோள் பிராட்பேண்ட் இணை சேவைகளை தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதை தடுக்க வேண்டும் என சுதேசி ஜாக்ரன் மஞ்ச் அமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து, ஆர்.எஸ்.எஸ்., அமைப்புடன் தொடர்புடைய சுதேசி ஜாக்ரன் மஞ்ச் அமைப்பின் பொறுப்பாளர் மாதவதாஸ் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்,
இந்தியாவில் வணிக ரீதியான செயற்கைக்கோள் பிராட்பேண்ட் இணைய சேவைகளை துவங்குவதற்காக ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தடுக்க வேண்டும்.
ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் இந்திய அரசுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.
அந்திய வணிகத்தை எதிர்த்தும், உள்ளூர் வணிகர்களை காத்திடவும் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் செயல்பாடுகளை தடுக்க வேண்டும். இந்த நிறுவனத்தை தடுக்க மத்திய அரசுக்கு முழு உரிமை உள்ளது.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
