ADDED : செப் 29, 2025 03:02 AM

புதுச்சேரி,: சென்ட்ரல் லயன்ஸ் சங்கம் சார்பில் வெறிநோய் தடுப்பு குறித்த மாணவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
புதுச்சேரி சென்ட்ரல் லயன்ஸ் சங்கம் சார்பில் செல்ல பிராணிகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வெறிநோய் தடுப்பு முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, முதலியார்பேட்டை ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. லயன்ஸ் சங்கத் தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் லதா மங்கேஷ்கர், வெற்றி பெற்ற 104 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் வெங்கடபதி, டாக்டர் சந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். விழாவில், சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் சிவகாந்தன், ரெமி ஜெரார்ட், ரவிக்குமார், செயலாளர்கள் சிவக்குமார், கார்த்திகேயன், பொருளாளர் சந்திரசேகர குப்தா, உறுப்பினர்கள் ராஜ்குமார், குருமூர்த்தி, செல்வதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.