/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வினாடி வினா போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு
/
வினாடி வினா போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : பிப் 17, 2024 11:20 PM

புதுச்சேரி: மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் நடந்த வினாடி - வினா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில், பொது அறிவு வினாடி வினா போட்டி நடந்தது. புதுச்சேரி, கடலுார், திண்டிவனம், விழுப்புரம் பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள் 500 பேர் கலந்து கொண்டனர்.
வானமே எல்லை அமைப்பின் நிறுவனர் முத்துக்குமரன் போட்டியை வழி நடத்தினார். கல்லுாரிகளுக்கு இடையிலான வினாடி - வினாப் போட்டியில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக மாண வர்கள் ராஜ்குமார், சுதாகர் முதலிடம் பிடித்தனர்.
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியிலுள்ள துறைகளுக்கு இடையிலான போட்டியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பொறியியல் துறை மாணவர்கள் செர்லி, கீர்த்தனா ரக்ஷீத்தா முதலிடம் பிடித்து சுழற்கோப்பை வென்றனர்.
பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் சீனியர் பிரிவில் அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ராகவ், ருத்திரிஷ்வரன், ஜூனியர் பிரிவில் புதுச்சேரி பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அன்டோன் பிரின்ஸ், விஷ்ணு பிரசாத் ஆகியோர் முதலிடம் பிடித்து சுழற்கோப்பை வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், கல்லுாரியின் இயக்குனர் வெங்கடாஜலபதி பாராட்டி பரிசு வழங்கினர்.
டீன் அகாடமிக்ஸ், டீன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, டீன் வேலைவாய்ப்பு, பல்வேறு பள்ளி களின் டீன், அனைத்து துறை தலைவர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.