நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; தட்டாஞ்சாவடியில் உள்ள கட்டுமான தொழிலாளர் நலவாரியம் எதிரில் அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் அருள் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் 'பெஞ்சல்' புயலின் போது பெரு வெள்ளத்தால், தொழிற்கருவிகள், வீட்டு உபயோக பொருட்களை இழந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு இழப்பீடாக அரசு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை ஆணையரிடம் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்கப்பட்டது.
இதில் பல்வேறு தொழிலாளர் சங்கம் மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

