தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சுப்பையா சிலைக்கு அலங்காரம் செய்யாததை கண்டித்து மறியல்

சுப்பையா சிலைக்கு அலங்காரம் செய்யாததை கண்டித்து மறியல்

சுப்பையா சிலைக்கு அலங்காரம் செய்யாததை கண்டித்து மறியல்


ADDED : நவ 01, 2026 06:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 06:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சுப்பையா சிலைக்கு விடுதலை நாளை முன்னிட்டு அலங்காரம் செய்யப்படாததை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் சாலை மறியல் நடந்தது.

புதுச்சேரி விடுதலை நாளை முன்னிட்டு சட்டசபை வளாகம், அரசு கட்டடங்கள், அனைத்து தலைவர்களின் சிலைகள் மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரி விடுதலைக்காக போராட்டம் நடத்திய சுப்பையா சிலைக்கு அலங்காரம் செய்யப்படவில்லை என தெரிகிறது.

இதனை கண்டித்து, இந்திய கம்யூ., அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நெல்லித்தோப்பு சுப்பையா சிலை அருகே சாலை மறியல் போராட்டம் இன்று (நவ.,1) நடந்தது. மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் இந்திய கம்யூ., நிர்வாக உறுப்பினர்கள் நாரா கலைநாதன், எல்லை சிவக்குமார், சுப்பையா, அந்தோணி, எழிலன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அவர்களிடம், உருளையன்பேட்டை போலீசார் பேச்சுவார்த்தை சமாதானம் செய்ததையடுத்து, மறியலை கைவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us