/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போராட்டம் நடத்தியவர்கள் விநாயகரை வைத்து பூஜை
/
போராட்டம் நடத்தியவர்கள் விநாயகரை வைத்து பூஜை
ADDED : ஆக 28, 2025 02:08 AM

புதுச்சேரி: நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் கூட்டு போராட்ட குழு, 3வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில், கோரிக்கைகளை நிறைவேற்ற விநாயகரை வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.
புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, உள்ளாட்சித்துறை அலுவலகம் முன்,3வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கதிரேசன் தலைமை தாங்கினார். வேளங்கன்னிதாசன், ஆனந்த கணபதி, கலியபெருமாள், சகாயராஜ், மண்ணாதான், முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரேமதாசன், பாலாஜி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
உள்ளாட்சி துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு 7வது, ஊதியக்குழு பரிந்துரைப்படி, 33 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலிறுத்தினர்.
3வது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற, பெரிய அளவில் விநாயகரை வைத்து, ஊழியர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.