தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சாலையோர மக்களுக்கு உணவு வழங்கல்

சாலையோர மக்களுக்கு உணவு வழங்கல்

சாலையோர மக்களுக்கு உணவு வழங்கல்


UPDATED : நவ 10, 2026 10:27 AM

ADDED : நவ 10, 2026 10:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 10:27 AM ADDED : நவ 10, 2026 10:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையன்று, சாலையோர மக்களுக்கு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, புதுச்சேரி கிளை சார்பில் தீபாவளி திருநாளின் போது, உணவகங்கள் மற்றும் கடைகள் பெரும்பாலும் விடுமுறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, சாலையோரம் வசிக்கும் மக்கள், கூலித் தொழிலாளர்கள், ஆதரவற்ற முதியோர்கள், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்ள நோயாளிகளின் உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும், ஒரு வேளை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, தட்டாஞ்சாவடி, இந்திரா காந்தி சிக்னல், ராஜீவ் காந்தி சிக்னல், ஈ.சி.ஆர். சாலை மற்றும் ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தவர்களுக்கு இட்லி, கறிக்குழம்பு காலை உணவாக வழங்கப்பட்டது. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளைத் தலைவர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். நிர்வாகக் குழு உறுப்பினர் அய்யனார் முன்னிலை வகித்தார்.

யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம், ஆயுட்கால உறுப்பினர்கள் சரவணன், பிரமேஷ் குமார், எத்தியன் போஸ் தன்னார்வலர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், பிரணவ்குமார் ஆகியோர் பொதுமக்களுக்கு உணவு வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us