/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.என்.எம்.,களுக்கு கைக்கணினி வழங்கல்
/
ஏ.என்.எம்.,களுக்கு கைக்கணினி வழங்கல்
ADDED : செப் 02, 2025 03:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஏ.என்.எம்.,க்களுக்கு கைக்கணினியை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஏ.என்.எம்.கள், பொது மக்களின் வீடுகளுக்குசென்று மருத்துவம் சார்ந்த விபரங்களை நிகழ் நேர அடிப்படையில் சேகரித்து பதிவேற்றுவதற்கு வசதியாக கைக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சட்டசபை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி , 220 ஏ.என்.எம்., களுக்கு தலா ரூ.20 ஆயிரம் மதிப்பிலான கைக்கணினிகளை வழங்கினார்.
சபாநாயகர் செல்வம்,சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.