/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்குவரத்து போலீசாருக்கு ஒளிரும் கவச உடை வழங்கல்
/
போக்குவரத்து போலீசாருக்கு ஒளிரும் கவச உடை வழங்கல்
ADDED : நவ 15, 2024 11:16 PM

பாகூர்: கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசாருக்கு, ஒளிரும் கவச உடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
போக்குவரத்து போலீசாரின் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்தும் வகையில், போக்குவரத்து எஸ்.பி., மோகன்குமார் ஏற்பாட்டின் பேரில், பாண்டிச்சேரி ஹெரிடேஜ் லேடீஸ் சர்க்கிள் 187 என்ற அமைப்பு, கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசாருக்கு, ஒளிரும் கவச உடை மற்றும் கையுரைகளை வழங்க முன்வந்தது. இதனை போலீசாருக்கு வழங்கும் நிகழ்ச்சி, கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நடந்தது.
போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவின்குமார் திரிபாதி கலந்து கொண்டு, ஒளிரும் கவச உடை மற்றும் கையுரைகளை, போக்குவரத்து போலீசாருக்கு வழங்கினார். நிகழ்ச்சியில், போக்குவரத்து எஸ்.பி., மோகன்குமார், இன்ஸ்பெக்டர் கணேசன், சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சந்திரசேகரன், பாண்டிச்சேரி ஹெரிடேஜ் லேடீஸ் சர்க்கிள் ௧௮௭ சேர்மன் அக்ஷயா உட்பட பலர் பங்கேற்றனர்.

