/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள்நாட்டு மீனவர்களுக்கு குளிர்சாதன பெட்டி வழங்கல்
/
உள்நாட்டு மீனவர்களுக்கு குளிர்சாதன பெட்டி வழங்கல்
ADDED : பிப் 14, 2024 03:35 AM

காரைக்கால் : காரைக்காலில் வேளாண்துறை சார்பில் உள்நாட்டு மீனவர்களுக்கு குளிர்சாதன பெட்டிகளை எம்.எல்.ஏ.,வழங்கினார்.
காரைக்கால் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மூலம் ஆத்மா முன்னோடி திட்டத்தில் மீனவர்கள் மற்றும் உள்நாட்டு மீன் வளர்போருக்கு காப்பிடப்பட்ட குளிர் பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கூடுதல் வேளாண் இயக்குனர் பயிற்சி கூடத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., திருமுருகன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு வழங்கினார்.
கூடுதல் வேளாண் இயக்குனர் கணேசன் முன்னிலையில் வகித்தார். இதில் ஸ்ரீ ரேணுகா தேவி ஆத்மா குழு உறுப்பினர்களுக்கு காப்பிடப்பட்ட குளிர்பெட்டிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துணை இயக்குனர் சீனிவாசன்,ஆத்மா துணை திட்ட இயக்குனர் முனைவர் ஜெயந்தி, வேளாண் அலுவலர் செந்தில்குமார், ஆத்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் புருஷோத்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

