/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடல் சார்ந்த தொழில் முனைவோர்க்கு ரூ.1.92 கோடியில் வாகனங்கள் வழங்கல்

ADDED : மார் 16, 2024 06:14 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், கடல் சார்ந்த தொழில் முனைவோர்க்கு மானியமாக, ரூ.1.92 கோடி மதிப்பில் வாகனங்களை, முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
மத்திய அரசு மீன் வளத்துறையின் பி.எம்.எம்.எஸ்.ஒய்., திட்டத்தின் மூலம், கடல் சார்ந்த தொழில் முனைவோர்க்கு, மானியமாக ரூ.1.92 கோடி மதிப்பில் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் மற்றும் ஐஸ் பெட்டியுடன் கூடிய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை, புதுச்சேரி மற்றும் ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்த, 68 பயனாளிகளுக்கு, முதல்வர் ரங்கசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், மீன்வளத்துறை இயக்குநர் இஸ்மாயில், இணை இயக்குநர் தெய்வ சிகாமணி, திட்ட அதிகாரி மீரா சாகிப் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.