/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
/
பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 07, 2025 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.ஆர்.டி.சி., ஊழியர்கள், கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
புதுச்சேரி பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.ஆர்.டி.சி., அலுவலகம் முன்பு நேற்று காலை 10:00 மணியளவில், ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில், ஈடுபட்டனர்.
வேலய்யன் தலைமை தாங்கினார். பாஸ்கர், ஞானவேல், ராதாகிருஷ்ணன், பிரமேதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒப்பந்த அடிப்படையில், நியமனங்கள் செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

