sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பி.எஸ்.என்.எல்., விற்பனை முகாம் புதுச்சேரியில் இன்று துவக்கம்

பி.எஸ்.என்.எல்., விற்பனை முகாம் புதுச்சேரியில் இன்று துவக்கம்

பி.எஸ்.என்.எல்., விற்பனை முகாம் புதுச்சேரியில் இன்று துவக்கம்


ADDED : பிப் 07, 2024 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 11:22 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் நடக்கிறது.

பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம் இன்று முதல் மூன்று நாட்கள் நடக்கிறது.

முகாம், மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை தபால் அலுவலகம் அருகில், வில்லியனுார் பஞ்சாயத்து அலுவலகம் அருகில், திருக்கனுார், கரிய மாணிக்கம், பாகூர் மற்றும் ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய எண்ணை மாற்றாமல், அதிவேக எப்.டி.டி.எச் தொழில் நுட்பத்திற்கு தங்கள் லேண்ட் லைன் எண்ணை இலவசமாக மாற்றி கொள்ளலாம். அதற்கான மோடம் முற்றிலும் இலவசம். புதிய எப்.டி.டி.எச் இணைப்பு ரூ.329 முதல் மற்றும் கிராமப்புறங்களில் ஆறு மாதங்களுக்கு ரூ.999க்கு கிடைக்கும்.

ரூ.269 மதிப்புள்ள சிம்கார்ட் ரூ.50, க்கு வழங்கப்படுகிறது. இந்த சிம்கார்டில் 45 நாட்களுக்கு தினசரி 2 ஜி.பி., டேட்டா, அளவில்லாமல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்.எம்.எஸ்., இலவசம். பிற நெட்வொர்க்கில் இருந்து, பி.எஸ்.என்.எல்.,க்கு வருபவர்களுக்கு ரூ.269 மதிப்புள்ள சிம் இலவசம். 2ஜி, 3ஜி சிம் வைத்திருப்பவர்கள் இலவசமாக, 4 ஜி சிம்மிற்கு மேம்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us