/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொம்மந்தான்மேட்டில் வெள்ளத் தடுப்பு சுவர் பணி விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
/
கொம்மந்தான்மேட்டில் வெள்ளத் தடுப்பு சுவர் பணி விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
கொம்மந்தான்மேட்டில் வெள்ளத் தடுப்பு சுவர் பணி விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
கொம்மந்தான்மேட்டில் வெள்ளத் தடுப்பு சுவர் பணி விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஆக 02, 2025 11:15 PM

கொம்மந்தான்மேடு தென்பெண்ணையாறு படுகை அணை சீரமைப்பு மற்றும் வெள்ள தடுப்பு சுவர் அமைக்கும் பணியை மழைக் காலத்திற்கு முன் முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாகூர் அடுத்த கொம்மந்தான்மேடு தென்பெண்ணையாற்றின் குறுக்கே, கடந்த 2011ம் ஆண்டு தரைப்பாலத்துடன் கூடிய தடுப்பணை கட்டப்பட்டது.
முறையான திட்டமிடலின்றி கட்டுமானம் அரைகுறையாக நடந்ததால், தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போதெல்லாம், அணைக்கட்டு உடைவதும், தரை பாலத்தின் இணைப்பு சாலை மற்றும் கரை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு அடித்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மீண்டும் தடுப்பணையின் கரை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, மண் அரிப்பு காரணமாக 100 மீட்டர் நீளத்திற்கு தண்ணீர் உள்ளே சென்று கரைகளை அடித்து சென்றுவிட்டது.
புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்டம் சார்பில், 10 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பில், கொம்மந்தான்மேடு தென்பெண்ணையாற்றின் கரையோர பகுதியில் வெள்ள தடுப்பு சுவர் அமைத்து, சேதமான அணைக்கட்டை சீரமைக்கும் பணியினை, கடந்த மார்ச் 16ம் தேதி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
கட்டுமான பணிகள் துவங்கி, நான்கு மாதங்கள் கடந்த விட்ட நிலையில், முதற்கட்டமாக கரையோரம் 300 மீட்டர் நீளத்திற்கும், 5 மீட்டர் உயரத்திற்கு வெள்ள தடுப்பு சுவருக்கு அஸ்திவார பணிகள் நடந்து வருகிறது.
ஒப்பந்தத்தின்படி, இந்த பணியை, வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடித்தாக வேண்டும். இதனிடையே, மழை குறுக்கிட்டால், பணிகளில் தொய்வு ஏற்படும். எனவே, மழைக் காலத்திற்குமுன், கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.