/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் எஸ்.பி., அலுவலகங்களில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டம்
/
போலீஸ் எஸ்.பி., அலுவலகங்களில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டம்
போலீஸ் எஸ்.பி., அலுவலகங்களில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டம்
போலீஸ் எஸ்.பி., அலுவலகங்களில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டம்
ADDED : நவ 23, 2024 05:44 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள எஸ்.பி., அலுவலகங்களில் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று (23ம் தேதி) நடக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள போலீஸ் மற்றும் போக்குவரத்து எஸ்.பி., அலுவலகங்களில் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று (23ம் தேதி) காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை மக்கள் குறை தீர்வு கூட்டம் நடக்கிறது.
அதன்படி, ரெட்டியார்பாளையம் வடக்கு பிரிவு எஸ்.பி., அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்திற்கு, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமை தாங்குகிறார்.
நேரு வீதி, போக்குவரத்து வடக்கு - கிழக்கு பிரிவு, எஸ்.பி. அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்திற்கு சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதியும், தவளக்குப்பம் தெற்கு பிரிவு எஸ்.பி., அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்திற்கு சீனியர் எஸ்.பி., கலைவாணனும் தலைமை தாங்குகின்றனர்.
மேலும், முத்தியால்பேட்டை கிழக்கு பிரிவு, வில்லியனுார் மேற்கு பிரிவு, மாகே, ஏனாம் எஸ்.பி., அலுவலகங்களிலும் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடக்கிறது.
இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு போக்குவரத்து, போலீஸ் சம்மந்தமான குறைகள் மற்றும் ஆலோசனைகளை கூறலாம் என தெரிவிக்கப்பட் டுள்ளது.