ADDED : அக் 14, 2024 08:25 AM

புதுச்சேரி : புதுச்சேரி மகளிர் முன்னேற அமைப்பு தலைவி அருள்பூஷனி எழுதிய நமது முதல்வரின் கவிதை நுால் வெளியீட்டு விழா நடந்தது.
தமிழ் சங்கத்தில் நடந்த விழாவிற்கு, உதவி பேராசிரியர்கள் திவ்யா, கயல்விழி வரவேற்றனர். தமிழ் சங்கத் தலைவர் முத்து, துரை மாலிறையன், சீனு வேணுகோபால், பாரதி முன்னிலை வகித்தனர்.கலைப்பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் சிறப்புரை ஆற்றினார். மகளிர் முன்னேற அமைப்பு தலைவி அருள்பூஷனி, அனைத்து சமூக அமைப்புகள் தலைவர் சித்தானந்தம் தொகுத்து வழங்கினர்.
விழாவில், சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு, நமது முதல்வரின் கவிதை நுாலை வெளியிட்டார். இதில், ராஜகோபால், கலாவிசு, கோடீஸ்வரி, குமார், தாமோதிரன், கலியுகன், மாணிக்கம், கவுசல்யா ராமசாமி, சரஸ்வதி, விசாலாட்சி, பிரியா, ஆதவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
கவிதாயினி பிரமிளாமேரி நன்றி கூறினார்.