தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி - கடலுார் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை

 புதுச்சேரி - கடலுார் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை

 புதுச்சேரி - கடலுார் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை


ADDED : பிப் 11, 2026 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 04:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி மற்றும் கடலுார் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில்,புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், கடலுார் மாவட்ட தேர்தல் அதிகாரி சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், புதுச்சேரி மற்றும் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு,எல்லைப் பகுதிகளில், இலவச பரிசு பொருட்கள், வெள்ளிப் பொருட்கள், தகுந்த ஆதாரம் இன்றி எடுத்துச் செல்லும் பணம், ஆயுதங்கள் மற்றும் மதுபானங்கள் உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுப்பது. கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது. புலனாய்வு பகிர்வு முறையை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகளில் கூடுதலாக சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்தி, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது.கூடுதலாக காவலர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களை பணியில் ஈடுபடுத்துவது. பறக்கும் படைகள் அமைப்பது. இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுவது குறித்து பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார், புதுச்சேரி சீனியர் எஸ்.பி.,கலைவாணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us