/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜிவ் நினைவிடத்தில் புதுச்சேரி காங்., அஞ்சலி
/
ராஜிவ் நினைவிடத்தில் புதுச்சேரி காங்., அஞ்சலி
ADDED : மே 22, 2025 03:30 AM

புதுச்சேரி: முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவிடத்தில் புதுச்சேரி காங்., சார்பில், அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் 34ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ராஜிவ் சிலைக்கு காங்., சார்பில், மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். காங்., அலுவலகத்திலும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, ஸ்ரீ பெரும்பதுாரில் உள்ள அவரது நினைவிடத்தில், ராஜ்பவன் தொகுதி காங்., பொறுப்பாளரும், முன்னாள் கவுன்சிலருமான குமரன் தலைமையில், காங்., நிர்வாகிகள் வேல்முருகன், ராஜாராம், ஜெரால்ட், ராஜ்மோகன், நாகசத்தியா, ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் முரளி, தமிழ்ச்செல்வன், வசந்த், ராஜேஷ், குமார், வெங்கடேஷ், தினகர், சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.