/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிரம பெண் உறுப்பினர் நீக்கம் ரத்து: புதுச்சேரி கோர்ட் உத்தரவு
/
ஆசிரம பெண் உறுப்பினர் நீக்கம் ரத்து: புதுச்சேரி கோர்ட் உத்தரவு
ஆசிரம பெண் உறுப்பினர் நீக்கம் ரத்து: புதுச்சேரி கோர்ட் உத்தரவு
ஆசிரம பெண் உறுப்பினர் நீக்கம் ரத்து: புதுச்சேரி கோர்ட் உத்தரவு
ADDED : மார் 16, 2025 07:34 AM
புதுச்சேரி; புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திலிருந்து பெண் உறுப்பினர் நீக்கப்பட்டதை ரத்து செய்து புதுச்சேரி கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
புதுச்சேரி ஆசிரம வாசி ஹேமலதா பிரசாத். இவரது 4 சகோதரிகளும், தங்கி சேவை புரிந்து வந்தனர். கடந்த 2001ம் ஆண்டு ஆசிரம உணவகத்தில் ஹேமலதா பிரசாத்தின் சகோதரிக்கு அங்கிருந்தவர் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
அப்போது ஏற்பட்ட பிரச்னையில் ஹேமலதா பிரசாத்தின் சகோதரி தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிரம நிர்வாகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனக்கூறி ஹேமலதா பிரசாத் போலீசில் புகார் அளிக்க முயன்றார்.
இதனால், அவர் ஆசிரம உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். ஆசிரமத்திலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து ஹேமலதா பிரசாத் புதுச்சேரி நான்காவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து நீதிபதி தாமோதரன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
விசாரணை முடிந்து கடந்த 12ம் தேதி வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், ஹேமலதா பிரசாத்தை ஆசிரமத்திலிருந்து நீக்கியதை நீதிபதி தாமோதரன் ரத்து செய்து உத்தரவிட்டார்.