/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுத்துறை வங்கிகளுடன் புதுச்சேரி அரசு ஒப்பந்தம்
/
பொதுத்துறை வங்கிகளுடன் புதுச்சேரி அரசு ஒப்பந்தம்
பொதுத்துறை வங்கிகளுடன் புதுச்சேரி அரசு ஒப்பந்தம்
பொதுத்துறை வங்கிகளுடன் புதுச்சேரி அரசு ஒப்பந்தம்
ADDED : மார் 06, 2026 04:12 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு, 4 முக்கிய பொதுத்துறை வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
புதுச்சேரி அரசு ஊழியர்களின் நிதி மற்றும் சமூக பாதுகாப்பு நலன்களை மேம்படுத்தும் வகையில், புதுச்சேரி அரசு, 4 பொதுத்துறை வங்கிகளான இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க ஆப் மகாராஷ்டிரா, யூகோ வங்கி ஆகிவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கையெழுத்திட்டுள்ளது.
சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில், முதல்வர் ரங்கசாமி முன்னிலையில், அரசு சார்பில் கணக்குகள் மற்றும் கருவூலம் துறை இயக்குனர் ஷேக் முகிதீன் கையெழுந்திட்டார்.
அதே போன்று, வங்கிககள் சார்பில், இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் வெங்கடசுப்ரமணியன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பிராந்திய மேலாளர் ரவிசங்கர் சாஹூ, பேங்க் ஆப் மகாராஷ்டிரா மண்டல மேலாளர் (சென்னை) அருண், யூகோ வங்கி துணை பொது மேலாளர் (சென்னை) அஜித் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில், தலைமை செயலர் சரத் சவுகான் உட்பட வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஒப்பந்தத்தில் மூலம், 23 ஆயிரம், அரசு ஊழியர்கள் பல்வேறு மேம்பட்ட வங்கி சேவைகள் மற்றும் நலன்களை பெற உள்ளனர்.
இதில், 1.76 கோடி ரூபாய் மதிப்பில், காப்பீடு பாதுகாப்பு, வீட்டு கடன், வாகன மற்றும் தனி நபர் கடன் ஆகியவற்றில் வட்டி விகித சலுகைகள், வங்கிகளின் விதிமுறைகளுக்கு ஏற்ப வழங்கப்பட உள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

