/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தரமற்ற வலி நிவாரண மாத்திரை தடை விதித்து புதுச்சேரி அரசு உத்தரவு
/
தரமற்ற வலி நிவாரண மாத்திரை தடை விதித்து புதுச்சேரி அரசு உத்தரவு
தரமற்ற வலி நிவாரண மாத்திரை தடை விதித்து புதுச்சேரி அரசு உத்தரவு
தரமற்ற வலி நிவாரண மாத்திரை தடை விதித்து புதுச்சேரி அரசு உத்தரவு
ADDED : பிப் 26, 2026 05:26 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் தரமற்ற வலி நிவாரணி மற்றும் சுவாச கோளாறு மாத்திரைகளுக்கு தடை விதித்து மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் போலி மருந்து உற்பத்தி விவகாரத்தை தொடர்ந்து, நாடு முழுதும் மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்படி தெலுங்கானா மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய ஆய்வில், இமாச்சல் பிரதேச மாநிலம், பவுண்டா சாகிப் நகரில் இயங்கி வரும் லெபோரேட் பார்மாசிட்டிக்கல்ஸ் நிறுவனம் தயாரிப்பான அஸ்லோபினாக் அண்டு பாராசிட்டமல் ( பேட்ஜ் எண்.ஏசிஏயூடி 007, உற்பத்தி தேதி 07/2025, காலாவதி தேதி 06/2028) வலி நிவாரண மாத்திரை மற்றும் இமாசல் பிரதேச மாநிலம், சோலான் நகரில் உள்ள சான்சிட்டோ டிராபிட்டிக் நிறுவனம் தயாரிப்பான மியூகோபார்ம்-ஏபி-போர்ட் (பேட்ஜ் எண்.எஸ்பி-9620, உற்பத்தி தேதி 01/2025, காலாவதி தேதி 12/2026) சுவாச கோளாறு மாத்திரை உரிய தரமில்லாத காரணத்தினால், தடை விதித்து உத்தரவிட்டது.
அதன்பேரில், இந்த மருந்துகளை புதுச்சேரியில் விற்க தடைவிதித்து, புதுச்சேரி மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரி ஆனந்தகிருஷ்ணன் நேற்று உத்தரவிட்டுள்ளார். தடை செய்யப்பட்டுள்ள இந்த வலி நிவாரணம் மற்றும் சுவாச கோளாறு மாத்திரை இருப்பு விபரத்தையும், அந்த மாத்திரைகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பிய விபரத்தை உடனடியாக மருந்து தரக்கட்டுப்பாட்டு துறைக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளார்.

