/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சினிமாவில் கதாநாயகியாக சாதிக்கும் புதுச்சேரி பட்டதாரி பெண்
/
சினிமாவில் கதாநாயகியாக சாதிக்கும் புதுச்சேரி பட்டதாரி பெண்
சினிமாவில் கதாநாயகியாக சாதிக்கும் புதுச்சேரி பட்டதாரி பெண்
சினிமாவில் கதாநாயகியாக சாதிக்கும் புதுச்சேரி பட்டதாரி பெண்
ADDED : மே 11, 2025 01:10 AM

சினிமாவில் புதுச்சேரியை சேர்ந்த நடிகை ஆராத்யா விறுவிறுவென 12 படங்களில் நடித்து திரை உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பாண்டுரங்கன் தயாரித்து, கஜேந்திரா இயக்கியுள்ள திரைப்படம் 'குற்றம் தவிர்'. இதில் ரிஷி ரித்விக் கதாநாயகனாகவும், ஆராத்யா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு, செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய், சாய்தீனா, மீசை ராஜேந்திரன், ராணுவ வீரர் காமராஜ், குழந்தை சாய் சைந்தவி என பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். இந்த படத்தின் முன்னோட்டம், பாடல் வெளியீட்டு விழாவும் அண்மையில் நடந்தது.
இந்த படத்தின் நாயகி ஆராத்யா நம் புதுச்சேரி மண்ணின் முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர். பள்ளி படிப்பை அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் முடித்த அவர், பி.டெக்., சிவில் பட்டப் படிப்பினை மணக்குள விநாயகர் இன்ஜினியரிங் கல்லுாரியில் முடித்தார்.
இவர் நடித்த மதிமாறன் படம் அமோசன் பிரைம் ஓ.டி.டி., தளத்தில் வெளியாகி, திரை உலகில் கவனத்தை ஈர்த்து அனைவராலும் பேசப்பட்டது. நடிகை ஆராத்யாவிற்கு நல்ல பெயர் கிடைத்தது.
இதன் மூலம் சினிமாத்துறையில ஆராத்யாவிற்கு சூப்பரான ஓபனிங் கிடைத்தது. இதுக்கப்புறமா, ஆராத்யா காட்டுல பட மழைதான். இதுவரை 12 சினிமா படங்களில் கதாநாயகியாகவும் மற்ற வேடங்களிலும் நடித்துள்ளார். அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் பெற்று வருகிறார்.
இவர் கதாநாயகியாக நடித்த இசைஞன், நடிகர் ஆனந்தராஜ்யின் மகளாக நடித்த மெட்ராஸ் மாப்பியா கம்பெனி, காந்தி கண்ணாடி என, அடுத்தடுத்து படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் புதுச்சேரியில் இருந்து கதாநாயகியாகி உள்ள நடிகை ஆராத்யாவிற்கு வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
என்னோட ஆசை, லட்சியம் எல்லாமே படிச்சு முடிச்சிட்டு சினிமாவில் நுழைய வேண்டும் என்பது தான். என்னுடைய கனவாகி இப்போது 12 படங்களில் நடித்துள்ளேன். மதிமாறன் எனக்கு நல்ல பெயர் பெற்றுக் கொடுத்தது.
அடுத்தடுத்து நான் நடித்த படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. சிறந்த கதாபாத்திரங்களை கொண்ட திரைபடங்களை தேர்ந்தெடுத்து நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்வேன் என்றார் நடிகை ஆராத்யா....