/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி நபரிடம் ரூ.1.42 லட்சம் மோசடி
/
புதுச்சேரி நபரிடம் ரூ.1.42 லட்சம் மோசடி
ADDED : மே 27, 2025 12:43 AM
புதுச்சேரி : ஆன்லைனில் பணம் செலுத்தினால், அதிக லாபம் கிடைக்கும் என கூறி புதுச்சேரி நபரிடம் ரூ.1.42 லட்சம் மோசடி செய்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி கோபாலன்கடையை சேர்ந்த ஆண் நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் பணம் செலுத்தி அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதைநம்பிய அவர், பல்வேறு தவணையாக மர்ம நபர் தெரிவித்த ஆன்லைனில் 1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் செலுத்தி, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை செய்து முடித்து வந்துள்ளார். அதன்மூலம் வந்த லாபப்பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.