/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண் டாக்டர் போல் 'பேஸ்புக்'ல் பழகி புதுச்சேரி நபரிடம் ரூ.79 லட்சம் மோசடி
/
பெண் டாக்டர் போல் 'பேஸ்புக்'ல் பழகி புதுச்சேரி நபரிடம் ரூ.79 லட்சம் மோசடி
பெண் டாக்டர் போல் 'பேஸ்புக்'ல் பழகி புதுச்சேரி நபரிடம் ரூ.79 லட்சம் மோசடி
பெண் டாக்டர் போல் 'பேஸ்புக்'ல் பழகி புதுச்சேரி நபரிடம் ரூ.79 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 24, 2025 03:38 AM
புதுச்சேரி: புதுச்சேரி நபரிடம் பேஸ்புக்கில் பெண் டாக்டர் போல் பழகி, ரூ.79 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, புதுக்குப்பத்தை சேர்ந்த நபரை, பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்ட நபர் வெளிநாட்டில் வசித்து வரும் பெண் டாக்டர் என கூறி, பழகி வந்துள்ளார். அந்த பெண் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாகவும், தனது கணவரின் வங்கி ்கணக்கில் 3 லட்சத்து 50 ஆயிரம் டாலர் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கணவர் இறந்து விட்டதால், அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தை, அதற்காக வரியை செலுத்தி எடுத்து விட்டதால், அதனை கொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம் என, கூறியுள்ளார். அதை நம்பிய நபர், பல்வேறு தவணைகளாக 79 லட்சத்து 68 ஆயிரத்து 200 ரூபாய் அனுப்பியுள்ளார். அதன் பின் அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், அரியாங்குப்பத்தை சேர்ந்த நபர்33 ஆயிரத்து 750, ஏம்பலத்தை சேர்ந்தவர் 73 ஆயிரம்,செம்பியம்பாளையம் நபர் 43 ஆயிரம், திலகர் நகரை சேர்ந்தவர்24 ஆயிரத்து 746, லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 54 ஆயிரம் உட்பட 11 பேர் மோசடி கும்பலிடம் 82 லட்சத்து 55 ஆயிரத்து 273 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.