/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு புதுச்சேரி நபரிடம் ரூ.56 லட்சம் மோசடி

ADDED : நவ 19, 2025 06:03 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் சைபர் மோசடி கும்பலிடம் பெண் உட்பட 5 பேர் ரூ.58. 80 லட்சம் ஏமாந்துள்ளனர்.
குரும்பாபேட் பகுதியை சேர்ந்தவரை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் டிரேடிங் செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம், என்றார். அதனை நம்பிய அவர், மர்ம நபர் கூறிய ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.56 லட்சம் முதலீடு செய்து, அவருக்கு கொடுத்த பணியை முடித்தார். அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. அதன் பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், பாகூரை சேர்ந்த பெண் பகுதி நேர வேலையாக ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.2.39 லட்சம் என, மொத்தம் 5 பேர் ரூ.58.80 லட்சத்தை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.