/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய காது கேளாதோர் விளையாட்டு போட்டி புதுச்சேரி வீரர்கள் கேரளா பயணம்

ADDED : மார் 28, 2025 05:19 AM

புதுச்சேரி: கேரளாவில் நடைபெறும் தேசிய அளவிலான காது கேளாதோர் விளையாட்டு போட்டியில் பங்கேற்க, புதுச்சேரி வீரர்கள் வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சந்திரசேகரன் நாயர் ஸ்டேடியத்தில், 9வது தேசிய அளவிலான காது கேளாதோர் சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் 26வது சீனியர் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
கடந்த 26ம் தேதி துவங்கி நாளை 29ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில், புதுச்சேரி காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் சார்பில், பயிற்சியாளர், மேலாளர் உள்பட்ட மொத்தம் 9 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
முன்னதாக, கேரளா மாநிலம் புறப்பட்டு சென்ற தடகள வீரர்களை, புதுச்சேரி காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் பொதுச் செயலாளர் பாசித், தலைவர் ஐயப்பன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சீருடைகள் வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். அப்போது, நிதி உதவி அளித்து உதவிய புவிராஜ், பயிற்சியாளர் கோபு ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.