/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய கராத்தே போட்டியில் பங்கேற்க புதுச்சேரி வீரர்கள் ராஞ்சி பயணம்
/
தேசிய கராத்தே போட்டியில் பங்கேற்க புதுச்சேரி வீரர்கள் ராஞ்சி பயணம்
தேசிய கராத்தே போட்டியில் பங்கேற்க புதுச்சேரி வீரர்கள் ராஞ்சி பயணம்
தேசிய கராத்தே போட்டியில் பங்கேற்க புதுச்சேரி வீரர்கள் ராஞ்சி பயணம்
ADDED : நவ 29, 2024 04:18 AM

புதுச்சேரி: தேசிய கராத்தே போட்டியில் பங்கேற்க புறப்பட்ட புதுச்சேரி வீரர்களை வழி அனுப்பும் நிகழ்ச்சி  நடந்தது.
அகில இந்திய கராத்தே  சங்கம் சார்பில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இன்று (29ம் தேதி) துவங்கி 1ம் தேதி வரை தேசிய கராத்தே போட்டிகள் நடக்கிறது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கராத்தே வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இதில், புதுச்சேரி மாநில ஒருங்கிணைந்த கராத்தே சங்கத்தின் சார்பாக 25 கராத்தே வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கான வழியனுப்பும் நிகழ்ச்சி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
அகில இந்திய  கராத்தே சங்கத் தலைவர் வளவன், புதுச்சேரி மாநில கராத்தே சங்கத் தலைவர் இளங்கோவன், துணைத் தலைவர்கள் கோவிந்தராஜ், மதிஒளி, இணைச்  செயலாளர் சுந்தர்ராஜன்,  மூத்த பயிற்சியாளர் வெங்கடாஜலபதி, நிர்வாகி ஆளவந்தார் ஆகியோர் வீரர்களை வாழ்த்தி வழியனுப்பினர். தொடர்ந்து, புதுச்சேரி மாநில கராத்தே அணியின் மேலாளர் பாரதி தலைமையில் வீரர்கள் ஜார்க்கண்ட் புறப்பட்டனர்.