/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடன் வாங்கியவர்களை மிரட்டி பணம் பறிப்பு சென்னை நபரை 'துாக்கியது' புதுச்சேரி போலீஸ்
/
கடன் வாங்கியவர்களை மிரட்டி பணம் பறிப்பு சென்னை நபரை 'துாக்கியது' புதுச்சேரி போலீஸ்
கடன் வாங்கியவர்களை மிரட்டி பணம் பறிப்பு சென்னை நபரை 'துாக்கியது' புதுச்சேரி போலீஸ்
கடன் வாங்கியவர்களை மிரட்டி பணம் பறிப்பு சென்னை நபரை 'துாக்கியது' புதுச்சேரி போலீஸ்
UPDATED : மே 30, 2025 02:51 PM
ADDED : மே 30, 2025 01:12 AM

புதுச்சேரி:போலி உடனடி கடன் செயலி வாயிலாக கடன் பெற்ற நபர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து, பணம் பறித்த முக்கிய குற்றவாளியை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த இளையரசன், 'பிங்கர்' என்ற உடனடி கடன் செயலியை பதிவிறக்கம் செய்து கடன் பெற்றார். கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து உரிய தேதிக்கு முன்பே திருப்பி செலுத்தியுள்ளார்.
இருப்பினும், அடையாளம் தெரியாத வங்கதேசத்தை சேர்ந்த நபர் வாட்ஸாப்பில், இளையரசனை தொடர்பு கொண்டு, கூடுதலாக பணம் செலுத்துமாறு கூறியுள்ளார்.
'மார்பிங்'
அவரது புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வாட்ஸாப்பில் அனுப்பி, பணத்தை செலுத்தவில்லை எனில், 'மார்பிங் மற்றும் ஆபாச புகைப்படங்களை உறவினர்களுக்கு பகிர்ந்து விடுவேன்' என மிரட்டி உள்ளார்.
இதையடுத்து, மிரட்டிய நபருக்கு, 63,089 ரூபாய் அனுப்பியுள்ளார். இருப்பினும், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்தனர்.
விசாரணையில், இளையரசன் அனுப்பிய பணம், சென்னையை சேர்ந்த கல்லுாரி மாணவரான அசிமுதீன் பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு சென்றது தெரியவந்தது.
அசிமுதீனிடம் போலீசார் விசாரித்தபோது, சென்னையை சேர்ந்த தன் நண்பரான சதாம் அன்சாரி, 34, என்பவரிடம் தன் வங்கி கணக்கு விபரங்களை வழங்கியதாக தெரிவித்தார்.
டிபாசிட்
போலீசார், சதாம் அன்சாரியை சென்னையில் கைது செய்து, புதுச்சேரி அழைத்து வந்தனர்.
விசாரணையில், கடன் செயலியில் பணம் பெறும் நபர்களை வெளிநாட்டை சேர்ந்தவர்கள் வாயிலாக மிரட்டி, அவர்களிடம் இருந்து வரும் மோசடி பணத்தை, தன் நண்பர்களின் வங்கி கணக்கில் வரவு வைத்து, பின், ஏ.டி.எம்.,மில் பணத்தை எடுத்து, மோசடியில் ஈடுபடும் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த நபர்களின் வங்கி கணக்கிற்கு டிபாசிட் செய்தது தெரியவந்தது.
இதுவரை பலரிடமும் மிரட்டி பெறப்பட்ட, 95 லட்சம் ரூபாயை, சதாம் அன்சாரி ஏ.டி.எம்.,மில் எடுத்து, வெளிநாடு மோசடி கும்பலுக்கு டிபாசிட் செய்தது தெரியவந்தது.
சதாம் அன்சாரி சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கில் தொடர்புடைய வெளிநாட்டை சேர்ந்த சிலரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.