/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெடுநாள் பூட்டிய வீடுகளை கன்னி வைத்து 'ஆட்டய' போடும் புதுச்சேரி ரவுடிகள்
/
நெடுநாள் பூட்டிய வீடுகளை கன்னி வைத்து 'ஆட்டய' போடும் புதுச்சேரி ரவுடிகள்
நெடுநாள் பூட்டிய வீடுகளை கன்னி வைத்து 'ஆட்டய' போடும் புதுச்சேரி ரவுடிகள்
நெடுநாள் பூட்டிய வீடுகளை கன்னி வைத்து 'ஆட்டய' போடும் புதுச்சேரி ரவுடிகள்
ADDED : அக் 25, 2025 11:10 PM
புதுச்சேரியில், முன்பெல்லாம் ரவுடிகள் சில்லறை சண்டை, வழிப்பறியில ஈடுபடுவாங்க.. அதுதான் அவர்களோட தினசரி வாழ்க்கையா இருந்துச்சு... ஆனா இப்போ விஷயம் வேற லெவலுக்கு மாறிடிச்சு.. பெரிய ரவுடிகள், சிறிய ரவுடிகளுக்கு வேற லெவலில் ஐடியாவும் அசைன்மென்ட்டும் கொடுக்கிறாங்க.
சண்டை இல்லாமல் சம்பாதிக்கணுமா... காலி வீட்டை பார், உரிமையாளர் யார் என்று கண்டுபிடி... செட்டிலாகிடலாம். அதான் இப்ப புதுச்சேரி முழுக்க நடக்குது. நகரில் நீண்ட காலமா பூட்டி கிடக்கும் வீடுகள், வெளிநாட்டில் இருக்கும் உரிமையாளர்கள், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் தான் இவர்களின் டார்கெட்.
அந்த இடம் யாருடையது, யார் பார்த்துக்கொள்கிறார், ஆவணத்தில் என்ன குறை இருக்கிறது என்பதெல்லாம் பத்திரப்பதிவு அலுவலகத்திலே பணிபுரியும் கருப்பு ஆடுகள் மூலமா தெரிஞ்சிக்கிறாங்க. அதற்கேற்ப போலி ஆவணங்களை அசத்தலா தயார் செய்து, உண்மையான ஆவணத்தோட சேர்த்திடுறாங்க.
உண்மையான உரிமையாளர் பத்திரத்தை பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. கொஞ்சம் ஆராய்ந்து பா ர்த்தால் தான் கண்டுபிடிக்க முடியும். அப்புறம் தான் இது எங்க ஆவணம் இல்லையென்று உரிமையாளருக்கே அதிர்ச்சியா இருக்கும். போலீசுக்கு போனால், இது சிவில் மேட்டர், நாங்கள் தலையிட மாட்டோம். கோர்ட்டுக்கு போங்க. அதோடு ஸ்டோரி முடிஞ்சு போயிடும்.
கோர்ட், வழக்கு, நேரம், பணம் எல்லாம் வேஸ்ட். மேலும், ரவுடிகளுடன் வம்பு வேண்டாம்னு மக்கள் செட்டில்மென்டுக்கு வந்துடுறாங்க. ஒரு கும்பல் வந்து, கொஞ்சம் பணம் கொடு, இல்லேன்னா இடத்தை நாங்களே கையெழுத்து போட்டுக்கிறோம்னு மிரட்டி, வீட்டு உரிமையாளராகி விடறாங்க. சில நேரங்களில் ஒரு இடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ரவுடிகள் குறி வைத்து மோதிக்குள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
அண்மையில் இ.சி.ஆரில் ஒரு இடத்திற்கு இரண்டு தாதா கும்பல்கள் மோதின. அந்த இடத்தின் மதிப்பு என்ன தெரியுமா. 8 கோடி ரூபாய். அந்த இடத்தின் உரிமையாளருக்கு அவருடைய இடம் என்றே தெரியவில்லை. இதனை சாதகமாக்கி ரவுடி கும்பலுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் சி.பி.சி.ஐ.டி,., போலீஸ் ஸ்டேஷன் வரை கதவு தட்டியுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், 'ரவுடி கும்பல் முதலில் உண்மையான உரிமையாளரின் பெயர், பத்திர எண், பழைய ஆவணங்களை எடுக்கறாங்க. அடுத்து அதே மாதிரி ஆவணத்தை (பத்திரப்பதிவு துறை கருப்பு ஆட்டின் உதவியோடு) தயாரிக்கிறாங்க. அப்புறம் பத்திர பதிவு துறையில் இருக்கும் உண்மை ஆவணத்தை அகற்றிவிட்டு, போலி ஆவணத்தை வைத்து விடுகின்றனர்.
இந்த போலி பத்திரம் உண்மையாகி விடுகிறது. இதுதான் இடத்தின் உரிமையாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. போலி உயில் என்று காட்ட, நாம் பத்திர பதிவு துறையை தான் நாட முடியும். பத்திரப்பதிவு துறையிலே, போலி இருந்தால் நாங்கள் எங்கே செல்ல முடியும். பத்திர பதிவு துறையில் இருக்கும் கருப்பு ஆடுகளை முதலில் களையெடுக்க வேண்டும்.
பிரான்ஸ் நாட்டில் இருக்கும் நில ஆவணங்களை ஒப்பிட்டு மீண்டும் புதுச்சேரிக்கு கொண்டு வர வேண்டும். அடுத்து நிலம், வீடு அபகரிப்பில் ஈடுபடும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தால் பிரச்னை தீரும்' என்கின்றனர்.

