/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிரிக்கெட் போட்டியில் வெற்றி புதுச்சேரி மாணவிக்கு பாராட்டு
/
கிரிக்கெட் போட்டியில் வெற்றி புதுச்சேரி மாணவிக்கு பாராட்டு
கிரிக்கெட் போட்டியில் வெற்றி புதுச்சேரி மாணவிக்கு பாராட்டு
கிரிக்கெட் போட்டியில் வெற்றி புதுச்சேரி மாணவிக்கு பாராட்டு
ADDED : ஜன 16, 2025 06:08 AM

வில்லியனுார்: அரியூர் வெங்கடேஷ்வரா பொறியியல் கல்லுாரி மாணவி தென்கிழக்கு ஆசிய டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்தார்.
அரியூர் வெங்கடேஷ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, முதலாம் ஆண்டு எம்.பி.ஏ மாணவி உமாமகேஸ்வரி, இந்திய மகளிர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். நேபாளம், போகாராவில் நடந்த தென்கிழக்கு ஆசிய சர்வதேச டென்னிஸ் பந்துக் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் விளையாடி, கோப்பை மற்றும் தங்கப் பதக்கத்தை பெற்றுகெடுத்தார்.
சாதனை மாணவிக்கு கல்லுாரியில் பாராட்டு விழா நடந்தது. கல்லுாரி தலைமை செயல் அதிகாரி வித்யா, கல்லுாரி முதல்வர் பிரதீப்தேவநேயன், துணை முதல்வர் ஜெயராமன், எம்.பி.ஏ., துறைத் தலைவர் அனிதா மற்றும் கல்லுாரி உடற்கல்வி இயக்குநர் குமரவேல் ஆகியோர் பங்கேற்று சாதனை மாணவி உமாமகேஸ்வரியை பாராட்டினர்.