/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
120 சதுர அடியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் கோலம் ஆசிரியர் தினத்தையொட்டி புதுச்சேரி மாணவி அசத்தல்

ADDED : செப் 05, 2025 11:28 PM

பாகூர்:பாரதியார் பல்கலைக்கூட நுண்கலை துறை மாணவி, தனது வீட்டு மாடியில், 120 சதுர அடி பரப்பளவில், டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவத்தை, முப்பரிமாண, ஓவியக் கோலமாக வரைந்து, ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்திருப்பது, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
புதுச்சேரி, பாகூர் அடுத்த சேலியமேடு குடியிருப்புபாளையம் பகுதியை சேர்ந்தவர் கீர்த்தனா, 24; அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூடத்தில் நுண்கலை நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், மாணவி கீர்த்தனா, தனது வீட்டு மொட்டை மாடியில், 120 சதுர அடி பரப்பளவில், கோலமாவை கொண்டு, முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின், உருவத்தை தத்ரூபமாக வரைந்து, ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த கோலம், 10 கிலோ கோலமாவை பயன்படுத்தி, 10 மணி நேரத்தில் போடப்பட்டது. டிஜிட்டல் ஓவியங்களுக்கு சவால் விடும் அளவிற்கும், மாணவி கீர்த்தனா போட்டுள்ள ஓவியக் கோலம், நேர்த்தியாகவும், தத்ரூபமாக உள்ளது.
இது குறித்து மாணவி கீர்த்தனா கூறுகையில், 'ஆசிரியர்களுக்கு, முன்னோடியாக திகழ்ந்து வரும் டாக்டர் ராதாகிருஷ்ணனின், 137 வது பிறந்தநாளில், அனைத்து ஆசிரியர்களுக்கும் வித்தியாசமான முறையில் வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்பினேன்.
எனக்கு, தெரிந்த நுண்கலை மூலமாக, டாக்டர் ராதாகிருஷ்ணனை உருவத்தை ஓவிய கோலமாக போட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது' என்றார். அவருக்கு பலர் நினைவு பரிசுகள் வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர்.