/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய ஸ்கேட்டிங் போட்டி புதுச்சேரி மாணவி தேர்வு
/
தேசிய ஸ்கேட்டிங் போட்டி புதுச்சேரி மாணவி தேர்வு
ADDED : அக் 01, 2025 11:22 PM

புதுச்சேரி: தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வான மாணவி மோனிஷாவை, அமைச்சர் நமச்சிவாயம் சால்வை அணிவித்து வாழ்த்தினார்.
புதுச்சேரியில் மாநில அளவிலான 27ம் ஆண்டு ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. இதில், 10 முதல் 12 வயது மாணவிகளுக்கான 200, 500, 1000 மீட்டர் ஆகிய பல்வேறு பிரிவுகளில் ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. இதில், மாணவி மோனிஷா பங்கேற்று, தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலமாக தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு முதல் நபராக தகுதி பெற்றார்.
இதையடுத்து, மாணவி மோனிஷா, அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, அமைச்சர் மாணவிக்கு, சால்வை அணிவித்து விளையாட்டுத்துறையில் மென்மேலும் பல சாதனைகள் படைத்து, புதுச்சேரிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்தினார்.