/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஸ்மார்ட் ஹேக்கத்தான் இறுதி போட்டி புதுச்சேரி மாணவிகள் பங்கேற்பு
/
ஸ்மார்ட் ஹேக்கத்தான் இறுதி போட்டி புதுச்சேரி மாணவிகள் பங்கேற்பு
ஸ்மார்ட் ஹேக்கத்தான் இறுதி போட்டி புதுச்சேரி மாணவிகள் பங்கேற்பு
ஸ்மார்ட் ஹேக்கத்தான் இறுதி போட்டி புதுச்சேரி மாணவிகள் பங்கேற்பு
ADDED : டிச 06, 2025 05:35 AM

புதுச்சேரி: ஜெய்ப்பூரில் நடக்க உள்ள அகில் இந்திய ஸ்மார்ட் ஹேக்கத்தான் இறுதி போட்டியில் பங்கேற்க செல்லும் மாணவிகளை அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.
அகில இந்திய அளவில் நடந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் - 2025 போட்டியில் தேர்ச்சி பெற்று, வரும் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை, ஜெ ய்ப்பூரில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் புதுச்சேரி மகளிர் பொறியியல் கல்லுாரி மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் சார்பில், அகில இந்திய அளவில் நடைபெற்ற இந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் 190 குழுக்கள் பிரிக்கப்பட்டு, இந்திய அளவில் ஐந்து குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன.
அதில் புதுச்சேரி மகளிர் பொ றியியல் கல்லுாரி மாணவிகள், உலக பிரச்னைகளுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு கா ணும் திட்டம் தொடர்பாக சமர்ப்பித்த யோசனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதையடுத்து, கல்லுாரி பேராசிரியர் காந்தி மோகன் தலைமையில் ஜெய்ப்பூர் செல்ல உள்ள மாணவிகள், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது கல்லுாரி முதல்வர் தணிகாசலம், பேராசிரியர் அனுராதா மற்றும் பலர் உடனிருந்தனர்.

