/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி மாணவர்கள் பாட்னா பயணம்
/
புதுச்சேரி மாணவர்கள் பாட்னா பயணம்
ADDED : ஜன 23, 2025 05:30 AM

புதுச்சேரி: பாட்னாவில் நடக்கும் 68வது தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் பங்கேற்க புதுச்சேரி மாணவ, மாணவியர் புறப்பட்டு சென்றனர்.
பீகார் மாநிலம், பாட்னாவில் 68வது தேசிய அளவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான சைக்கிளிங் போட்டி நேற்று (22ம் தேதி) துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
இப்போட்டியில் புதுச்சேரி அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு இயக்குனரகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக, அவர்களை ஓய்வு பெற்ற தாசில்தார் அய்யனார், உடற்கல்வி விரிவுரையாளர் ரவிக்குமார், ஆசிரியர் ராஜகுரு ஆகியோர் ரயில் நிலையத்தில் வாழ்த்தி, வழியனுப்பி வைத்தனர்.
அணியின் பயிற்சியாளராக உடற்கல்வி விரிவுரையாளர் பிரேம்குமார், மாணவ, மாணவியர்களுடன் சென்றார்.