/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய மரப்பந்து விளையாட்டு போட்டி புதுச்சேரிக்கு 9 வெண்கல பதக்கங்கள்
/
தேசிய மரப்பந்து விளையாட்டு போட்டி புதுச்சேரிக்கு 9 வெண்கல பதக்கங்கள்
தேசிய மரப்பந்து விளையாட்டு போட்டி புதுச்சேரிக்கு 9 வெண்கல பதக்கங்கள்
தேசிய மரப்பந்து விளையாட்டு போட்டி புதுச்சேரிக்கு 9 வெண்கல பதக்கங்கள்
ADDED : ஏப் 24, 2025 05:20 AM

புதுச்சேரி: தேசிய அளவிலான மரப்பந்து போட்டியில் 9 வெண்கல பதக்கங்களை புதுச்சேரி வீரர்கள் வென்று சாதித்துள்ளனர்.
உலகம் முழுதும் 'உட் பால்' எனப்படும் மரப்பந்து விளையாட்டு பரவி வருகிறது. இந்தியாவில் இவ்விளையாட்டு அங்கீரிக்கப்பட்டுள்ளது. இது, இந்திய பள்ளி விளையாட்டு அங்கீகாரம், அகில இந்திய கல்லுாரி, பல்கலைக்கழக விளையாட்டு அங்கீகாரம் பெற்ற விளையாட்டாக உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு இந்திய மரப்பந்து சம்மேளனம் செயல்படுகிறது. இதன் மாநில சங்கமாக புதுச்சேரி மரப்பந்து சங்கம் நிறுவப்பட்டுள்ளது. காரைக்கால், மாகே, ஏனாம் உள்ளடக்கிய சங்கமாக இது உள்ளது.
அண்மையில் தேசிய அளவிலான உட்பால் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்தது. இதில் புதுச்சேரி வீரர்கள் ரோகித், திவாகர், சூரியா, குனசேகர், மனீஷ், ராஜாமணி, பாலசுப்ரமணி, அரிபிரசாத், திருக்குமரன், ஆகியோர் வெண்கல பதக்கங்கள் வென்று சாதித்தனர்.
இவர்களை புதுச்சேரி உட்பால் சங்க தலைவர் அசோக்பாபு பாராட்டினார். நிகழ்ச்சியில் சங்க செயலாளர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்க தலைவர் அசோக் பாபு எம்.எல்.ஏ., கூறுகையில், 'முதலாவது தேசிய போட்டியிலேயே புதுச்சேரி வீரர்கள் பங்கு பெற்று 9 வெண்கல பதக்கங்கள் வென்று சாதித்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்திற்கு பெருமை தேடி தந்துள்ளனர்.
மாவட்ட சங்கங்கள் விரைவில் நிரப்பப்படும்' என்றார்.