/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அட்டிய பட்டியா போட்டியில் புதுச்சேரி மகளிர் அணி சாம்பியன்
/
அட்டிய பட்டியா போட்டியில் புதுச்சேரி மகளிர் அணி சாம்பியன்
அட்டிய பட்டியா போட்டியில் புதுச்சேரி மகளிர் அணி சாம்பியன்
அட்டிய பட்டியா போட்டியில் புதுச்சேரி மகளிர் அணி சாம்பியன்
ADDED : அக் 16, 2025 11:30 PM

புதுச்சேரி: பெல்காமில் நடந்த 38வது தேசிய சீனியர் அட்டிய பட்டியா சாம்பியன்ஷிப் போட்டியில், புதுச்சேரி மகளிர் அணி முதலிடம் பெற்றது.
கர்நாடக மாநிலம், பெல்காமில் 38 வது தேசிய சீனியர் அட்டிய பட்டியா சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
அதில், நாடு முழுதும் உள்ள 24 மாநிலங்களை சார்ந்த ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் கலந்து கொண்டன.
லீக் முறையில் நடந்த போட்டிகளில், புதுச்சேரி மகளிர் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று, கேரளா அணியுடன் மோதியது. அதில், புதுச்சேரி அணி வெற்றி பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தது. இதேபோல், புதுச்சேரி ஆடவர் அணி மூன்றாம் இடம் பிடித்தது.
மகளிர் பிரிவில் சிறந்த ஆல்ரவுண்டராக சந்தியா, ஆடவர் பிரிவில் சிறந்த அபன்சராக சஞ்சை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.