/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரவுடிகளின் வீடுகள், லாட்ஜ்களில் சோதனை
/
ரவுடிகளின் வீடுகள், லாட்ஜ்களில் சோதனை
ADDED : ஜன 07, 2024 04:56 AM
புதுச்சேரி: புதுச்சேரி ரவுடிகளின் வீடுகள், லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
புதுச்சேரியில் குற்றச்செயல்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா தலைமையில் எஸ்.பி.கள்., பக்தவச்சலம், வீரவல்லபன், ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் வெங்கடஜலபதி, முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட கண்டாக்டர் தோட்டம், அண்ணா சாலை, புஸ்சி வீதிகளில் உள்ள லாட்ஜ்கள் மற்றும் ரவுடிகளின் வீடுகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு அதிரடி சோதனை நடத்தினர்.
அதேபோல் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட வானரப்பேட்டை, உப்பளம் அம்பேத்கர் சாலை, அனிதா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொடி அணி வகுப்பு நடத்தி, அப்பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ரவுடிகளின் வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல், வில்லியனுார் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.