/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராமர் கோவில் கும்பாபிேஷகம் நேரடி ஒளிபரப்பு
/
ராமர் கோவில் கும்பாபிேஷகம் நேரடி ஒளிபரப்பு
ADDED : ஜன 22, 2024 06:07 AM
புதுச்சேரி : அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷக நிகழ்ச்சிகள் புதுச்சேரி கோவில்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிேஷகம் இன்று 22ம் தேதி நடக்கிறது. இந்த விழாவையொட்டி, புதுச்சேரி காந்தி வீதி வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள கோதண்டராம சன்னதியில், இன்று காலை 9:00 மணிக்கு லட்சுமணர், சீதை, அனுமனுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது.
ஸ்ரீராம நாம சங்கீர்த்தனம், ஸ்ரீராம நாம கீர்த்தனை நிகழ்ச்சிளை தொடர்ந்து, 11:00 மணிக்கு உலக நலன் கருதி மகா சங்கல்பம், அர்ச்சனை, மகா தீபாராதனை நடக்கிறது. பின், 12:00 மணியளவில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷக நிகழ்ச்சிகள் திரையில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
இதில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
அதே போன்று, காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவில், முத்தியால்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில், முதலியார்பேட்டை வன்னியபெருமாள், வில்லியனுார் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களில் ராமர் கோவில் கும்பாபிேஷக நிகழ்ச்சிகள் நேரடியாக திரையில் ஒளிபரப்பப்படுகிறது.