தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சென்னை ராமகிருஷ்ண மடம் புதுச்சேரி கிளை இன்று திறப்பு

சென்னை ராமகிருஷ்ண மடம் புதுச்சேரி கிளை இன்று திறப்பு

சென்னை ராமகிருஷ்ண மடம் புதுச்சேரி கிளை இன்று திறப்பு


UPDATED : அக் 10, 2026 12:00 AM

ADDED : அக் 09, 2026 08:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 12:00 AM ADDED : அக் 09, 2026 08:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கருவடிக்குப்பம் மெயின் ரோட்டில், சென்னை ராமகிருஷ்ண மடத்தின், புதுச்சேரி கிளை திறப்பு விழா இன்று 10ம் தேதி நடக்கிறது.

இதையொட்டி, நேற்று மதியம் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி வேத பாடசாலையின் ஆனந்த நாராயண சாஸ்திரிகள் மற்றும் அவரது குழுவினர் மூலம் கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், நவக்கிரக பூஜை நடந்தது.

அதில், கவர்னர் கைலாஷ்நாதன், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து, ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் தலைவர் சுவாமி கவுதமானந்தஜி மகராஜிடம் ஆசி பெற்றனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, முக்கிய நிகழ்வாக இன்று 10ம் தேதி காலை 7:00 மணிக்கு திருமூவரைப் பிரதிஷ்டை செய்தல், 9:30 மணிக்கு சிறப்பு பூஜை, 10:30 மணிக்கு ஹோமம், 11:30 மணிக்கு ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் தலைவர் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் ஆசியுரை நடக்கிறது.

மதியம் 2:00 மணி முதல் கோயம்புத்துார், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தின் ஹரிவிரதானந்தர், சென்னை ராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவி ஆத்மகனானந்தர், பேலுார் மடம் ராமகிருஷ்ண மிஷன் சாரதா பீடத்தின் செயலாளர் சுகதேவானந்தர், விழுப்புரம் ராமகிருஷ்ண மிஷன் செயலாளர் பரமசுகானந்தர் ஆகியோரின் சொற்பொழிவு நடக்கிறது.

மாலை நடக்கும் விழாவில், முதல்வர் ரங்கசாமி தலைமை விருந்தினராக பங்கேற்று ராமகிருஷ்ண மடம், புதுச்சேரி கிளையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us