/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க ராமலிங்கம் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

ADDED : மார் 28, 2025 05:20 AM
புதுச்சேரி; சட்டசபை பூஜ்ய நேரத்தில் ராமலிங்கம் எம்.எல்.ஏ., பேசியதாவது:
புதுச்சேரியில் பார்களும், ரெஸ்டோ பார்களும் மது பிரியர்களுக்கு தேவையான அளவை விட அதிகமாகவே இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதுபோன்ற நிலையில் புதுச்சேரி நகரப்பகுதியில் சில மதுப்பிரியர்கள் மதுக்கூடங்களுக்கு உள்ளே சென்று அருந்தாமல் கடை வாசலிலேயே மதுக்களை வாங்கி அருந்துகின்றனர்.
இது சிறுவர்களையும், பள்ளி மாணவர்களையும் மது அருந்த துாண்டும் வகையில் உள்ளது. மேலும் அவ்வாறு மது அருந்துபவர்களின் சேட்டைகள் அவ்வழியே செல்லும் பெண்களுக்கு அச்சுறுத்தலையும் தருகிறது. இது சட்டம் ஒழுங்கு சீர்குலையவும் காரணமாக இருக்கும்.
எனவே பார்கள் மற்றும் ரெஸ்டோ பார்களுக்கு வெளியில் மது அருந்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் கிராமப்புற பகுதிகளில் வயல் வெளிகளிலும், பொது இடங்களிலும் மது அருந்துவது அதிகரித்து வருகிறது. அவ்வாறு மது அருந்துபவர்களுக்கு இடையே மோதல் நடந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு காரணமாக உள்ளது.
எனவே அரசும், காவல்துறையும் கிராமப்புறங்களில் பொது இடங்களில் மது அருந்துவதை முற்றிலும் தடுக்க வேண்டும்.