/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிங்காரவேலர் பிறந்தநாள் விழா முதல்வர் ரங்கசாமி மரியாதை
/
சிங்காரவேலர் பிறந்தநாள் விழா முதல்வர் ரங்கசாமி மரியாதை
சிங்காரவேலர் பிறந்தநாள் விழா முதல்வர் ரங்கசாமி மரியாதை
சிங்காரவேலர் பிறந்தநாள் விழா முதல்வர் ரங்கசாமி மரியாதை
ADDED : பிப் 19, 2025 04:12 AM

புதுச்சேரி : புதுச்சேரி அரசு சார்பில் சிங்காரவேலர்பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
கடலுார் சாலையில் அமைந்துள்ள சிங்காரவேலர் சிலைக்குமுதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மலர்துாவி மரியாதை செலுத்தினார்.சபாநாயகர் செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமிகாந்தன், பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க., சார்பில், மாநில அமைப்பாளர் சிவா தலைமையில், மாநில அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார், துணை அமைப்பாளர் அனிபால்கென்னடி உள்ளிட்டோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திய கம்யூ., சார்பில் மாநில செயலாளர் சலீம் தலைமையில், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் தலைமையில், சேர்மன் வெங்கட்டராமன் ஆகியோர், சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநில செயலாளர் மோகனசுந்தரம், ரவிக்குமார், பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

